புதுச்சேரி மக்களவை உறுப்பினராக இருப்பவர் வைத்திலிங்கம். நேற்று (அக்.5) பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. பிறகு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புதுச்சேரி மக்களவை உறுப்பினருக்கு கரோனா
புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்திலிங்கம்
இந்நிலையில் பரிசோதனை முடிவில் இவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது இன்று (அக்.6) மதியம் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய அவரது கட்சி நிர்வாகிகள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.