தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

parliament adjourned : எதிர்கட்சிகள் அமளிக்கிடையே நிதி மசோதா நிறைவேற்றம்! - மக்களவை மாநிலங்களவை முடக்கம்

எதிர்க் கட்சிகளின் தீவிர போராட்டத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3வது வாரமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 28, 2023, 1:00 PM IST

டெல்லி :ராகுல் காந்தி விவகாரத்தில் எதிர்க் கட்சி உறுபினர்களின் அமளிக்கிடையே மேலவையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அவை தொடங்கிய சில நிமிடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ராகுல் காந்தி தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தின் அவையின் மையப் பகுதியில் திரண்டு கோஷம் எழுப்பினர். முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அவையில் எழுப்பப்பட உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் பாஜக தரப்பிலும் நாடளுமன்ற கட்சிக் கூட்டம் நடைபெற்றது. உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அதேநேரம் மேலவையில் அமளிக்கு மத்தியில் 2023 - 24 நிதி ஆண்டுக்கான நிதி மசோதா நிறைவேற்றப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கான நிதி மசோதா மேலவையில் பரீசலிக்கப்பட்டு கீழ் அவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து மக்களவையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எதிர் கட்சி உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது காகிதங்களை தூக்கி வீசி அமளியில் ஈடுபட்டனர். அவையை கண்ணியத்துடன் நடத்த விரும்புவதாக தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டத்தை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதானி விவகாரம், ராகுல் காந்தி பிரச்சினை காரணமாக கடந்த 3 வாரமாக நாடாளுமன்றம் ஸ்தம்பித்து காணப்படுகிறது.

இதையும் படிங்க :பிபிசி பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கம்: காரணம் மத்திய அரசா? பஞ்சாப் அரசா?

ABOUT THE AUTHOR

...view details