டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மக்களவை 13 அமர்வுகளாக 62 மணி நேரம் 42 நிமிடங்கள் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - Winter session of Parliament
நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டம் டிசம்பர் 29ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில் 6 நாட்கள் முன்னதாவே இன்று (டிசம்பர் 23) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (டிசம்பர் 22) மக்களவையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க:மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்