தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு கட்டிங் சொல்லேன்: ரயிலை நிறுத்திவிட்டு மது அருந்த சென்ற ஓட்டுநர்

பிகாரில் ரயில் ஓட்டுநர் மது அருந்த சென்றதால், பயணிகள் ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டது.

ரயில் ஓட்டுநர் மது அருந்த சென்றதால் ஒரு மணி நேரம் தாமதமான ரயில்
ரயில் ஓட்டுநர் மது அருந்த சென்றதால் ஒரு மணி நேரம் தாமதமான ரயில்

By

Published : May 3, 2022, 11:04 PM IST

பிகார்மாநிலம், சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தின் ஹசன்பூர் ரயில் நிலையத்தில் நேற்று (மே 2) ரயில் ஓட்டுநர் மது அருந்த சென்றதால், பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரயில் புறப்படும் நேரத்திற்கும் முன், ரயில் ஓட்டுநர் கரண்வீர் யாதவ் இன்ஜின் பெட்டியிலிருந்து திடீரென மாயமானார். சிக்னல் போடப்பட்டும் ரயில் நகராமல் இருந்ததைக் கண்ட ஸ்டேசன் மாஸ்டர், இது குறித்து விசாரித்துள்ளார். இதற்கிடையில், தாமதத்தால் எரிச்சலடைந்த பயணிகள், கூச்சலிடவும் ஆரம்பித்தனர்.

இதனையடுத்து, ஸ்டேசன் மாஸ்டர் மனோஜ் குமார் சவுத்ரி, வேறொரு ரயில் ஓட்டுநரான ரிஷி குமாரை ரயிலை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன்பின், மாயமான ரயில் ஓட்டுநர் கரண்வீர் யாதவை ரயில்வே காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவரை மார்க்கெட் அருகே போதையில் தள்ளாடும் நிலையில் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:டிரம்ஸ் வாசிக்கும் பிரதமர் நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details