எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும், அதன் பாதுகாப்பை சிறிய அளவிலான பூட்டுதான் உறுதி செய்கிறது. ஒரு இடத்தில் புதிதாக குடியேறுபவர்கள் முதற்கொண்டு புதிய வீட்டைக் கட்டுபவர்வரை வீட்டின் தாழ்ப்பாள்களுக்கும், பூட்டுக்கும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் பழம் பெரும் பூட்டுத் தொழிலாளி ஒருவர் சுமார் 300 கிராம் எடையுள்ள பூட்டை உருவாக்கியுள்ளார். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் இந்த ராட்சத பூட்டு, ஒரு வயதான தம்பதியால் உருவாக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அது தான்.
அலிகாரில் அமைந்துள்ள ஜ்வாலபுரி பகுதியில் வசிக்கும் சத்ய பிரகாஷ் சர்மா, அவரது மனைவி ருக்மணி சர்மா இணைந்து இந்தப் பூட்டை வடிவமைத்துள்ளனர். கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தப் பூட்டு செய்வதற்கான ஆர்டர் இத்தம்பதியினருக்கு கிடைத்துள்ளது.