கரோனா இரண்டாவது அலை பரவல் குறித்து நாட்டு மக்களிடம் இன்று(ஏப்.20) பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது;
உலகிலேயே விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் கிடைக்கிறது. கரோனா 2வது அலையால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளோம். மக்கள் நினைத்தால் கரோனாவை முறியடிக்க முடியும்.
நமது நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் அனைத்து நோயாளிகளுக்கும் கிடைக்க வழிவகைச் செய்யப்படும்.
பொதுமுடக்கம் என்பதை கடைசி ஆயுதமாக மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும். கரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் முழு முடக்கத்தை தடுக்கலாம்.
கடந்த ஆண்டை போல மோசமான நிலை தற்போது இல்லை. முகக்கவசம் முதல் வெண்டிலேட்டர் வரை மருத்துவ சாதனங்கள் உற்பத்து செய்து சாதனை படைத்துள்ளோம்.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50 விழுக்காடு நேரடியாக மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேசமயம் சிக்கலான நேரத்தில் நாம் அனைவரும் பொறுமை இழக்காமல் இருக்க வேண்டும். என தெரிவித்தார்
இதையும் படிங்க: கரோனா அச்சம்: தொடர் ஆலோசனையில் பிரதமர் மோடி!