தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தெலங்கானாவில் முழு ஊரடங்கு கிடையாது' - கே.சி.ஆர் திட்டவட்டம் - கே.சந்திரசேகர் ராவ்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடியாது, அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிலைகுலைத்துவிடும் என்று முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

Lockdown will lead to collapse of economy, says Telangana CM
Lockdown will lead to collapse of economy, says Telangana CM

By

Published : May 7, 2021, 4:22 PM IST

தெலங்கானாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடியாது, அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிலைகுலைத்துவிடும் என்று முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் கே.சி.ஆர் கூறுகையில், "ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மற்ற மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்தபாடு இல்லை. கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் முழு ஊரடங்கு அமல்படுத்துவதில் ஒரு பயனும் இல்லை. ஏனெனில் தெலங்கானா, உற்பத்தியில் இந்தியாவில் முக்கிய மாநிலமாக உள்ளது. 25 - 30 லட்சம் வெளிமாநிலத்தவர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பெருமளவில் நெல் சாகுபடியும் தெலங்கானாவில் செய்யப்படுகிறது. பால், காய்கறி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே கரோனா பாதிப்பு எங்கு அதிகமாக உள்ளதோ அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details