டெல்லியில் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
நோயாளிகளின் அதீத எண்ணிக்கையால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு டெல்லி மருத்துவமனைகள் திணறிவருகின்றன. தொற்றுப் பரவலைத் தடுத்திட அந்த யூனியன் பிரதேசத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அதாவது, மே 3ஆம் தேதி, திங்கள்கிழமை காலை 4 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஏப்ரல் 28ஆம் தேதிமுதல் தடுப்பூசி பதிவு தொடக்கம் - மத்திய அரசு