தலைநகர் டெல்லியில் வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரவிருந்த நிலையில், அதை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பெருந்தொற்றிலிருந்து டெல்லி மீண்டும் வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் கெஜ்ரிவால், ”பெற்ற பலன்களை அவசரப்பட்டு இழக்க விரும்பவில்லை. எனவே ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் தற்போது 66 ஆயிரத்து 295 பேர் கோவிட்-19 சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,244ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய 25 பேர் கைது