கடந்த ஏழு மாதங்களாக, கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ரயில் சேவை முடக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதை தொடர்ந்து, முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று முதல் உள்ளூர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்று முதல் உள்ளூர் ரயில் சேவைகள் தொடக்கம்! - மேற்கு வங்கத்தில் நாளை முதல் உள்ளூர் ரயில் சேவைகள்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று முதல் உள்ளூர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Railways
ஹவுரா, கரக்பூர் உள்ளிட்ட 696 ரயில் நிலையங்களில் உள்ளூர் ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ரயில் முழுவதும் சானிடைசர் தெளிக்கப்படும் எனவும் நடுவில் உள்ள சீட்டுகள் நிரப்பப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Nov 11, 2020, 5:42 AM IST