தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லோன் செயலியால் இளைஞர் தற்கொலை: பணம் செலுத்தாததால் நிர்வாணப்படம் வெளியிட்டு மிரட்டிய நிர்வாகிகள் - இளைஞர் தற்கொலை

ஆந்திரப்பிரதேசத்தில் கடனை திருப்பிச்செலுத்தாத இளைஞரின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கடன்செயலி நிர்வாகிகள் அவரது உறவினர்களுக்கு அனுப்பி உள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இளைஞர் தற்கொலை
இளைஞர் தற்கொலை

By

Published : Jun 28, 2022, 7:18 PM IST

ஆந்திரா: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியம் மண்டலத்தைச் சேர்ந்தவர் கோனா சதீஷ் (வயது 28). முதுநிலைப் பட்டதாரியான இவர் தனது படிப்பு செலவுகளுக்காக ஆன்லைன் கடன்செயலியில் பணம் வாங்கியுள்ளார்.

சில பிரச்னைகள் காரணமாக கோனா சதீஷால் உரிய நேரத்தில் கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கடன் செயலி நிர்வாகிகள் சதீஷின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து நிர்வாண கோலத்தில் இருப்பது போன்று வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளனர்.

இதனால் சதீஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சினிமாவுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அன்று பீமாவரம் பகுதியில் சதீஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் அவரின் குடும்பத்திற்குத் தெரிய வர போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அவர் இறந்து போன பிறகும் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசப் படங்கள் அனுப்பி கடன் செயலி நிர்வாகிகள் தொல்லை கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கடியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலுக்கு வருமாறு மிரட்டல் - துணை நடிகை புகார்

ABOUT THE AUTHOR

...view details