டெல்லி: மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களின் அனைத்துத் தொகுதிகளிலும் எல்ஜேபி போட்டியிடுகிறது.
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக் டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் இரு மாநிலங்களிலும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகின்றனர். இது தொடர்பாக தலைவர் (சிராக் பஸ்வான்) முடிவெடுப்பார்” என்றார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கம், சர்பானந்த சோனாவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கும் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகிற ஏப்ரல் -மே மாதங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: நிதிஷ்குமார் மீண்டும் வென்றால் பிகார் அழிந்துபோகும் - சிராக் பாஸ்வான் தாக்கு!