தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரின் முன்னேற்றத்துக்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் - பிரதமர் மோடி - பிரதமர் மோடி

மக்கள் கூட்டம் திரளாய் இருந்த 200 மைதானங்களில் மோடியின் பரப்புரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அராரியா, சாஹர்சா ஆகிய இடங்களில் இன்று அவரது பேரணி நடைபெற்றது.

Modi addresses rally in Forbesganj
Modi addresses rally in Forbesganj

By

Published : Nov 3, 2020, 5:11 PM IST

பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

மக்கள் கூட்டம் திரளாய் இருந்த 200 மைதானங்களில் அவரது பரப்புரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அராரியா, சாஹர்சா ஆகிய இடங்களில் இன்று அவரது பேரணி நடைபெற்றது. முதல் பேரணி காலை 9.30 மணிக்கு அராரியாவில் தொடங்கியது. இரண்டாவது பேரணி சாஹர்சாவில் உள்ள படேல் மைதானத்தில் 11.30 மணியளவில் தொடங்கியது. இதனை நேரடி ஒளிபரப்பு செய்யும் பணியை பாஜகவினர் மேற்கொண்டிருந்தனர்.

இதில் பேசிய மோடி, பிகாரின் முன்னேற்றத்துக்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்று தெரிவித்தார். 17 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details