தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்.ஆர்.காங்-பாஜகவிற்கு இடையே சுமூக பேச்சுவார்த்தை: மிக விரைவில் அமைச்சர்கள் பட்டியல் - என்ஆர் காங்கிரஸ்

புதுச்சேரி: என்.ஆர்.காங் - பாஜகவிற்கு இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளதாகவும், மிக விரைவில் அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிடுவார் என பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

என்.ஆர்.காங்-பாஜகவிற்கு இடையே சுமூக பேச்சுவார்த்தை
என்.ஆர்.காங்-பாஜகவிற்கு இடையே சுமூக பேச்சுவார்த்தை

By

Published : Jun 7, 2021, 12:00 AM IST

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நமச்சிவாயம், பொதுச் செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் இணைந்து புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறியதாவது, "மாநிலம் முழுவதும் உள்ள கரோனா நோயாளிகளுக்கான அனைத்து மருத்துவமனைகளும் திறம்பட செயல்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி உள்ளிட்ட எந்தவிதமான வசதி குறைபாடுகளும் ஏற்படவிடாமல் மருத்துவர்களும், செவிலியர்களும் சேவை செய்து வருகிறார்கள். மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகள் அதிகமானோர் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சர்கள் குறித்தான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டது. முதலமைச்சர் ரங்கசாமி ஓரிரு நாளில் அமைச்சர்களின் பட்டியலை அறிவிப்பார்.

துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கீடு குறித்து பாஜக, முதலமைச்சருக்கு எந்த நெருக்கடியும் அளிக்கவில்லை. விரைவில் அமைச்சரவை பொறுப்பேற்று அரசு பணிகள் தொடரும். புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது." எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details