தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாம் முதலமைச்சராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்பு

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்த விஸ்வ சர்மா சற்று நேரத்தில் பதவியேற்கிறார்.

ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்பு
ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்பு

By

Published : May 10, 2021, 12:07 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்த விஸ்வ சர்மா இன்று (மே.10) பதவியேற்கிறார். தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை நேற்று (மே.9) ஆளுநரை சந்தித்து வழங்கியதையடுத்து, அவரை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் ஜகதீஷ் முகி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் 12 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 8 இடங்களுக்கு இரண்டாம் கட்டமாக பதவியேற்பு விழா நடைபெறும்.

இன்று பதவியேற்க வாய்ப்புள்ள அமைச்சர்களின் விவரம்:

  1. சந்திரமோகன் படோரி (பாஜக)
  2. ரஞ்சித் தாஸ் (பாஜக)
  3. பிஸ்வாஜித் தைமரி (பாஜக)
  4. ஜோகேன் மகான் (பாஜக)
  5. ஹிதேந்திரநாத் கோஸ்வாமி (பாஜக)
  6. அஜந்தா நியோக் (பாஜக)
  7. பியூஷ் ஹசாரிகா (பாஜக)
  8. சஞ்சய் கிசான் (பாஜக)
  9. கௌசிக் ராய் (பாஜக)
  10. அதுல் போரா (ஏ.ஜே.பி)
  11. கேஷாப் மகாந்தா (ஏ.ஜே.பி)
  12. கோபிந்த பாசுமாட்டரி (யுபிபிஎல்)

ABOUT THE AUTHOR

...view details