தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.5.47 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள் காவல் துறையினரால் நொறுக்கி அழிக்கப்பட்டன!

ஆந்திரப்பிரதேசத்தில் நேற்று(செப்.14) ரூ.5.47 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் காவல் ஆணையர் கந்திரனா டாடா மேற்பார்வையில் ரோடு ரோலர்களால் நொறுக்கி அழிக்கப்பட்டன.

ரூ.5.47 கோடி மதிப்பிலான மது பாட்டில்கள் காவல்துறையினரால் நொறுக்கப்பட்டது..!
ரூ.5.47 கோடி மதிப்பிலான மது பாட்டில்கள் காவல்துறையினரால் நொறுக்கப்பட்டது..!

By

Published : Sep 15, 2022, 6:54 PM IST

கிருஷ்ணா, (ஆந்திரப் பிரதேசம்): சுமார் ரூ.5.47 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் காவல் ஆணையர் கந்திரனா டாடா மேற்பார்வையில் சாலையில் அடுக்கப்பட்டு ரோடு ரோலர்களால் நொறுக்கப்பட்டது. இந்தச்சம்பவத்தின் போது, அவருடன் காவல் இணை ஆணையர் மேரி பிரசாந்தி மற்றும் ஏனைய காவல்துறையினர் உடனிருந்தனர்.

இதில் பேசிய ஆணையர், இதுவரை நந்திகாமா உட்பிரிவுப்பகுதிகளில் 6,075 மதுபாட்டில்கள் கடத்தல் வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார். மேலும், பல்வேறு ரகத்தைச்சேர்ந்த 2,43,385 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 5.47 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிக்கப்படுவது இம்மாநிலத்தில் இதுவே முதல் முறை என காவல் ஆணையர் தெரிவித்துக்கொண்டார். மூன்று ரோடு ரோலர்களின் உதவியுடன் இந்த மது பாட்டில்கள் நொறுக்கப்பட்டன.

தொட்டச்சர்லா தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஓர் தனி நபருக்குச் சொந்தமான இடத்தில், ஏறத்தாழ அரைக் கிலோமீட்டருக்கு அடுக்கப்பட்ட மது பாட்டில்கள் ரோடு ரோலர்களால் நொறுக்கி, அழிக்கப்பட்டன. இந்தக் காட்சியை அப்பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

ரூ.5.47 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள் காவல் துறையினரால் நொறுக்கி அழிக்கப்பட்டன!

இதையும் படிங்க: 'சட்டவிரோதங்களை சட்டப்பூர்வமாக்கப் பார்க்கிறார்கள்...!' - கேரள ஆளுநர்

ABOUT THE AUTHOR

...view details