புதுச்சேரி: மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, ஜுன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து, ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஜுன் 14ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
- 'இன்று(ஜுன்.8) முதல் அனைத்துக் கடைகளும் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். ஆனால், பார்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
- மாலை 5 மணி வரை புதுச்சேரியில் பேருந்துகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பூங்காக்கள், திரையரங்குகள், மல்டிஃபிளெக்ஸ், பொழுதுபோக்கு மையங்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் இயங்கலாம்.
- உணவகங்களில் பார்சல் மட்டுமே மாலை 5 மணி வரை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது' இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.