தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு!

புதுச்சேரி: இன்று (ஜுன்.8) முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

மதுக்கடைகள் திறப்பு
மதுக்கடைகள் திறப்பு

By

Published : Jun 8, 2021, 12:43 PM IST

புதுச்சேரியில் கரோனா அதிகரிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனையும் அதிகரித்தது.

இதையும் மீறி ஒரு சிலர் மது கிடைக்காததால் சானிடைசர் போன்றவற்றை குடித்து உயிரிழந்தனர். எனவே உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், மாநில வருவாயை பெருக்கும் வகையிலும் மதுக்கடைகளை கரோனா விதிகளுக்குட்பட்டு திறக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

மதுக்கடைகள் திறப்பு

இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (ஜுன்.8) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் திறப்பு

அதன்படி 40 நாட்களுக்கு பிறகு இன்று காலை புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியை கடைபிடித்து மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி வருகின்றனர்.

கலால்துறை ஆணையர் சுதாகர் மதுக்கடையில் கரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து வருகிறார்.

இதையும் படிங்க: 'கறுப்புப் பூஞ்சை சிகிச்சைக்கு சிறப்பு வார்டு அமைக்கப்படும்':மா.சுப்பிரமணியம்

ABOUT THE AUTHOR

...view details