தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மதுபானங்கள் மீதான கரோனா வரியை ரத்து செய்ய கோரிக்கை! - மதுபான உரிமையாளர்கள் கோரிக்கை

புதுச்சேரி: மாநிலத்தில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள மதுபானங்கள் மீதான கரோனா வரியை ரத்து செய்ய நடவடிக்கைக எடுக்க வேண்டும் என மதுபான உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

liquor-owners-demand-repeal-of-corona-tax-on-liquor
liquor-owners-demand-repeal-of-corona-tax-on-liquor

By

Published : Dec 1, 2020, 10:10 PM IST

புதுச்சேரியில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள மதுபானங்கள் மீதான கரோனா வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுபான உரிமையாளர்கள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட போது, ஜூன் மாதம் முதல் புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

அப்போது கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு என்பதால் தமிழ்நாட்டிலிருந்து அதிகப்படியான நபர்கள் புதுச்சேரிக்குள் வருவதை தடுப்பதற்காகவும் மதுபானங்கள் மீது கோவிட் வரி விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே நேற்றுடன் மதுபானங்கள் மீதான வரியின் காலக்கெடு முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கரோனா வரியை ரத்து செய்ய முடிவெடுத்து, அதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த 2 மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் கரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் மதுபானங்கள் மீதான கரோனா வரியை தற்போது ரத்து முடியாது என்றும், வரும் ஜனவரி 31ஆம் வரை இந்த வரி அமலில் இருக்கும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரி மாநில மதுபான உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும், மதுபானங்களின் விற்பனையும் பெருமளவில் சரிந்துள்ளதால் அரசு நீட்டிப்பு செய்துள்ள கரோனா வரியை ரத்து வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தனியார் கல்குவாரி, கல் அரவை தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details