பெங்களூரு :பசவண்ணர் தோற்றுவித்த லிங்காயத் மதத்தில் ஆண்-பெண் வேறுபாடு கிடையாது. சிவலிங்கத்தை அனைவரும் கழுத்தில் அணிவார்கள். பெண்களுக்கு பூஜை செய்ய அனுமதி உண்டு. மாதவிலக்கு தீட்டு கிடையாது. இந்த மதத்தில் சிவலிங்கமே பிரதான கடவுள். எனினும் இவர்கள் இந்து மதத்தின் பூஜை வேள்ளி உள்ளிட்ட கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் கிடையாது.
இவர்களை "லிங்காயத்" அல்லது வீர சைவ சமய சைவர்கள் என்ற அழைப்பார்கள். இந்த லிங்காயத் சமூகத்தினர் கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் வசிக்கின்றனர். கர்நாடகாவில் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் லிங்காயத் சமூகத்தினர் உள்ளனர்.
மாநிலத்தின் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில், 110க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத் மக்கள் இருக்கின்றனர். இவர்கள், தங்களை இந்து மதத்திலிருந்து பிரித்து தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என பல நூறு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடக அரசு லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது.