ராய்பூர்:சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூர் சுண்ணாம்பு சுரங்கத்தில் இன்று (டிசம்பர் 2) திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் மண்ணுக்கடியில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீயணைப்புத் துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்துக்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜக்தல்பூர் சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து... 7 பேர் உயிரிழப்பு... - limestone mine accident in Jagdalpur
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உள்ள ஜக்தல்பூர் சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் 7 உயிரிழந்தனர்.
இதனிடையே மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்புப் பணியில் இணைந்துள்ளனர். இதுகுறித்து நகர்நார் போலீசார் கூறுகையில், இந்த விபத்தின்போது 20-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்கடியில் சிக்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை 5 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பெண் தற்கொலை