பாட்னா :பீகாரில் இடி மின்னல் தாக்கி 26 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் பருவமழை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் இடி மின்னல் தாக்கி 26 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரோடாஸ் மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற போது, தீடீரென் மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் பக்சார் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜென்னபாத் சுற்றுவட்டார பகுதியில் அடுத்தடுத்து மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மின்னல் தாக்கி உடல் கருகிய ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பன்காவில் மின்னல் மற்றும் கொட்டித் தீர்த்த கனமழையால் கால்நடைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின்னல் தாக்கி கீழே விழுந்த கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற நிலையில், அவை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.