தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எட்டு வயது வளர்ப்பு மகனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் - கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம்

குவாலியரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தனது வளர்ப்பு மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் ஜூலி என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

வளர்ப்பு மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
வளர்ப்பு மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

By

Published : Jan 10, 2023, 2:28 PM IST

போபால்:மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் எட்டு வயது வளர்ப்பு மகனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குவாலியரை சேர்ந்த ராஜூபரிஹார் என்பவரது மனைவி சீமா பரிஹார் சாலை விபத்தில் உயிரிழந்ததால், ஜூலி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனிடையே முதல் மனைவி சீமாவின் பெயரில் விபத்து காப்பீட்டு செய்யப்பட்டிருந்ததால், ராஜூக்கு ரூ.12 லட்சம் கிடைத்துள்ளது.

இந்த பணத்தில் ரூ.8 லட்சத்தை அவரது மகன் நிதின் பெயரில் நிரந்திர வைப்பு தொகையில் வைத்துள்ளார். இதனை அறிந்த ஜூலி அந்த பணத்தை பெறுவதற்காக நிதினை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படியே, 2021ஆம் ஆண்டு செப். 22ஆம் தேதி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் நிதினுக்கு விஷம் கொடுத்தார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிதின் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனிடையே சிறுவன் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் ஜூலி கொடுத்த தேநீரை குடித்தப்பின்பே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஜூலி மீது ராஜூ போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு குவாலியர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் இன்று (ஜனவரி 10) தீர்ப்பு ஜூலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மூன்றாவது மாடியில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - டெல்லியில் கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details