மும்பை (மகாராஷ்டிரா):மறைந்த பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மகள் தாமரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பா கேகேவுடன், தானும், சகோதரர் நகுலும் இருக்கும் சிறு வயது புகைப்படத்தைப் பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், "அப்பா, நீங்கள் இல்லாத வாழ்க்கை இருள் சூழ்ந்திருக்கிறது. நீங்கள் எங்களிடம் மிகவும் அன்பாக இருந்தீர்கள். ஐ மிஸ் யூ அப்பா. உங்களுடன் சாப்பிடுவது, சிரிப்பது, உங்களுடைய கை பிடித்து நடப்பது என அனைத்தையும் மிஸ் பண்றேன்.
ஆனால், உங்கள் அன்பு எல்லாவற்றையும் கையாளத் தயார்படுத்தியுள்ளது. உங்கள் அன்புதான் எங்கள் பலம். நான், நகுல், அம்மா எங்கள் உழைப்பின் மூலம் உங்களைப் பெருமைப்படுத்துவோம். உலகத்தின் சிறந்த தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். நீங்கள் எங்களுடன் தான் இருக்கிறீர்கள். லவ் யூ ஃபார் எவர், மிஸ் யூ எவரி டே அப்பா" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
கேகே, மகள் தாமரா, மகன் நகுல்
புகழ்பெற்ற பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் கடந்த மே 31ஆம் தேதி கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பாடகர் கேகே பாடிய இறுதி பாடல் நிகழ்ச்சி வீடியோ! - துள்ளிக்குதித்த ரசிகர்கள்