புதுச்சேரியில் நீர் ஆதாரமாக விளங்கிய நினைவு மண்டபத்தைப் பார்வையிட்ட தமிழிசை! - Puducherry Election 2021
புதுச்சேரி: உலக நீர் நாளை முன்னிட்டு புதுச்சேரிக்கு நீர் ஆதாரமாக விளங்கிய ஆயி நினைவு மண்டபத்தை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.
உலக நீர் நாளை முன்னிட்டு மக்களிடையே விரிவாகப் பரப்புரை செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர்வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் இம்மாதம் 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலகத் தண்ணீர் நாளான இன்று (மார்ச் 22) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாரதி பூங்காவில் உள்ள ஆயி நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டார்.
புதுச்சேரி நகரத்தின் நீர் ஆதாரமாக விளங்கிய முத்திர பாளையத்தில் அமைந்துள்ள ஆயி குலத்தை குறிக்கும்விதமாக பாரதி பூங்காவில் உள்ள ஆயி நினைவு மண்டபத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் ஆலோசகர் மகேஸ்வரி உள்ளாட்சித் துறைச் செயலர் வல்லவன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கோலாஸ் நகரில் இயங்கிக்கொண்டிருக்கும் 'குடிநீர் சுத்திகரிப்பு' நிலையத்தையும் பார்வையிட்டார்.