தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' - துணை நிலை ஆளுநர் தமிழிசை! - தமிழிசை செய்திக்குறிப்பு

புதுச்சேரி: ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

tamilisai
தமிழிசை

By

Published : Mar 11, 2021, 8:38 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, " ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்.

துணை நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு

ஒன்றாம் முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு, மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகள் இயங்கும் என்றும், அதன் பின்னர் விடுமுறை விடப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details