தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Libiya flood: லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2,000 பேர் பலி! கடும் வெள்ளப்பெருக்கு! - libiya death toll

libiya flood death: லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டெர்னா நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் கிட்டத்தட்ட 2,000 பேர் உயிரிழந்ததாகவும், பலர் மாயமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Floods in eastern Libya
லிபியாவில் வெள்ளம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 12:54 PM IST

திரிபோலி(லிபியா):வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா மத்திய தரைக்கடல் எல்லையில் அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டெர்னா தாக்கிய டேனியல் புயல் மற்றும் அதைத் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பரப்பளவில் பெரிய நாடாக இருக்கும் லிபியா நாட்டில் மக்கள் தொகை குறைவாகவே உள்ளது. புயலால் ஏற்பட்ட கனமழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டிடங்கள், வீடுகள், இடிந்து பேரிழப்பாக மாறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. லிபியா மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், டெர்னா பகுதி சதுப்புநிலமாக காணப்படுவதால், வெள்ளத்தில் கட்டிடங்கள் மன்னுக்குள் புதைந்தும் மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கி இருக்க வாய்ப்பு உள்ளது என மீட்பு பணியினர் தெரிவிக்கிறனர். பலர் உயிரிழந்த நிலையில், இன்னும் நிறைய நபர்கள் மண்ணுக்குள் சிக்கியும் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி.. ஆந்திராவில் பந்த்.. கலவரத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர்!

இந்நிலையில் லிபியா கிழக்கு பகுதியில் புயல், கனமழை, வெள்ளத்தில் சிக்கி 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஒசாமா ஹமத் தகவல் தெரிவித்துள்ளார். அதே போல், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்னர் என குறிபிட்டுள்ளார். இந்த பேரழிவால் டெர்னா பகுதியை பேரிடர் பகுதியாக அறிவித்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்

மேலும், ஆயுதப்படைகளின் செய்தித்தொடர்பாளர் அஷ்மத் அல்-மோஸ்மரி கூறும்போது, "5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை மக்கள் காணாமல் போய் உள்ளனர்" என்று கூறினார். கிழக்கு லிபியா அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் எஸ்ஸாம் அபு ஜெரிபா கூறுகையில், டெர்னாவில் 5,000க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும், காணாமல் போன பலர் மத்திய தரைக்கடலை நோக்கி அடித்து செல்லபட்டுள்ளார்கள் என தெரிவித்தார்.

லிபியா நாட்டு மக்கள் வெளியிட்ட வீடியோவில், இரு புரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து. நடுவில் நீரோடை போல வெள்ள்ம் ஓடும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்ற பணி தீவிரமடைந்துள்ளது.

உள்நாட்டு போர் நடந்து வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 2,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது லிபியா நாட்டில் 2000 நபர்கள் உயிரிழந்தது அனைத்து உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:Nipah Virus : கேரளாவில் நிபா வைரஸ் பரவலா? காயச்சலுக்கு சிகிச்சை பெற்ற இருவர் பலி!

ABOUT THE AUTHOR

...view details