தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அனைத்திலும் ஆளுநர் தலையிட்டால் மாநில அரசு எதற்கு' - மணீஷ் சிசோடியா காட்டம்

டெல்லி அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் ஆளுநர் அதிகார வரம்பு மீறி தலையிடுகிறார் எனத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Manish Sisodia
Manish Sisodia

By

Published : Jul 25, 2021, 7:41 AM IST

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது.

அங்கு துணை நிலை ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவிவருகிறது. ஆட்சி விவகாரங்களில் ஆளுநர் வரம்பு மீறி தலையிடுகிறார் என்று தொடர் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைத்துவருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில், டெல்லி அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் தேர்வு குறித்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அதில், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மாறான நபரை டெல்லி அரசு வழக்கறிஞராகத் தேர்வு செய்துள்ளது என டெல்லி அரசின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் அவர் கூறியுள்ளார்.

இதற்கு டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "டெல்லி அரசின் அனைத்து விவகாரங்களிலும் ஆளுநர் தலையிடுவது முறையற்றது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் மட்டுமே ஆளுநர் தலையிடுவது உகந்ததே தவிர, அனைத்து விவகாரங்களிலும் அவர் ஊடுருவல் மேற்கொள்வது அதிகார வரம்பு மீறல்" என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக் 3ஆம் நாள்: களமாடும் முக்கிய இந்திய வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details