புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் வரை தேர்தலை புறக்கணிக்க அரசியல் கட்சிகளுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி நேற்று விடுத்த அழைப்பை காங்கிரஸ் கட்சி ஏற்கிறது. மாநில அந்துஸ்துக்காக டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கிறேன்.
மாநில அந்தஸ்து பெற டெல்லி செல்வோம் வாருங்கள்... - என்.ஆர் காங்கிரஸ்
புதுச்சேரி: மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை வலியுறுத்த டெல்லிக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமிக்கு அமைச்சர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
kandasamy
புதுச்சேரியில் சட்டத்தை கையில் எடுத்துள்ள துணைநிலை ஆளுநரை மாற்ற பல முறை கோரிக்கை வைத்தும்,பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. அதிகாரம் இல்லாமல் அரசை எப்படி நடத்த முடியும்? “ என்றார். பேட்டியின் போது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி உடன் இருந்தார்.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மோசடி!