உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனை முன்னிட்டு நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சர்வதேச மகளிர் நாளன்று சக குடிமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நம் நாட்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய சாதனைகளைப் படைத்துவருகின்றனர்.