மும்பை:லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு பாஜக நெருக்கடி கொடுக்கும் நிலையில், இச்சட்டத்தை முதலில் இயற்ற பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தயாரா? என சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.
லவ் ஜிகாத் விவகாரத்தில் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து சஞ்சய் ராவத் கூறுகையில், “லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை முதலில் பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு இயற்றட்டும், அதன்பிறகு சிவசேனா யோசிக்கும்” என்றும் தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத்திடம் பத்திரிகையாளர்கள் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் குறித்து கேள்வியெழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ராவத், “மகாராஷ்டிரா மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறிவருகின்றனர். நான் இந்த விஷயம் தொடர்பாக காலை முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயிடம் பேசினேன். இதில் ஒன்றை கூறிக்கொள்கிறேன்.