தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்முவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை - terrorist killed in Anantnag

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஹைபிரிட் பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

ஜம்முவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்முவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை

By

Published : Nov 20, 2022, 3:14 PM IST

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்த்தில் உள்ள பிஜ்பெஹாராவின் செக்கி டுடூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் பயங்கவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து அனந்த்நாக் போலீசார் தரப்பில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஹைபிரிட் பயங்கரவாதி சஜ்ஜத் தந்த்ரே சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கும் பிஜ்பெஹாராவில் உள்ள தொழிலாளியின் கொலை சம்பவத்துக்கும் தொடர்புள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது கைத்துப்பாக்கி (பிஸ்டல்), பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டது. அவருடன் தொடர்புடைய பலரது அடையாளங்கள் தெரியவந்துள்ளன. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையிருடன் இணைந்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்.. பெங்களூரு மாணவர்கள் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details