பாட்னா(பிகார்):இந்தியாவில் செப்டம்பர் 6, 2018 அன்று, LGBTQ உரிமைகளை ஏற்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு பல வருடங்கள் கடந்தும், சமூகம் இன்னும் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஒருவரையொருவர் காதலிப்பதாகக் கூறிக்கொண்ட இரண்டு பெண்கள் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பெண் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை அளித்துள்ளனர். அங்குள்ள காவல்துறையினரால் வழக்கு ஏற்க மறுக்கப்பட்டதால், பாட்னா எஸ்பி மானவ்ஜித் சிங் தில்லானிடம் பாதுகாப்புக் கோரி எஸ்.பி.யின் இல்லத்துக்குச் சென்றனர்.
காதலில் விழுந்த தோழிகள்- போலீஸிடம் தஞ்சம்
பாட்னா காவல்நிலையத்தில் இரண்டு பெண்கள் காதலிப்பதாகவும் அவர்களது குடும்பத்தினர் பிரிக்க முயற்சிப்பதாகவும் கூறி உதவி கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்திராபுரியில் உள்ள தனிஷ்க் ஸ்ரீ மற்றும் சஹாஸராவின் ஸ்ரேயா கோஷும் ஒருவரையொருவர் காதலித்து சேர்ந்து வாழ விருப்பப்பட்டுள்ளனர். இருவரின் குடும்பத்தாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்களையும் பிடுங்கி கொடுமை செய்துள்ளனர். தற்போது இருவரும் பாட்னா எஸ்.பியிடம் இருவரையும் காப்பாற்றுமாறு உதவி கோரியுள்ளனர். மேலும் இருவரும் 18 வயதை கடந்த மேஜர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பேரக்குழந்தைகளை பெற்றுத்தாருங்கள், இல்லையேல் நஷ்ட ஈடு தாருங்கள்! - மகனுக்கு பெற்றோர் கொடுத்த ஷாக்!