ஹைதராபாத்:செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், சாண்டி, மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
லியோ திரைப்படம் ஐ - மெக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது. முதல் நாளன்று லியோ திரைப்படத்திற்கு 16 லட்சம் டிக்கெட் விற்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாள் டிக்கெட் விற்பனையில் ஜவான் படத்தை தாண்டியுள்ளது. மேலும் முதல் நாள் டிக்கெட் விற்பனை 20 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்திற்குத் தமிழ் மொழியில் மட்டும் கிட்டதட்ட 13.75 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 2.10 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜவான் படத்திற்கு முதல் நாளில் 15.75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. சாக்னில்க் என்ற வர்த்தக நிறுவன அறிக்கையின் படி, இந்த வருடத்தில் அதிக டிக்கெட் முன்பதிவான படங்களில் லியோ முதலிடத்தை பிடித்துள்ளது.