பத்ம விபூஷண் விருது பெற்ற கதக் ஜாம்பவான் பண்டிட் பிர்ஜு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு காலமானார். இவருக்கு வயது 83. இந்த தகவலை அவரது பேரன் சவரன்ஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரும் கலைஞர்களில் ஒருவரான இவர் திரைத்துறையிலும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளார்.
விஸ்வரூபம் திரைப்படத்திற்காக கமல்ஹாசன் கதக் நடனத்தை பிர்ஜு மகாராஜ்ஜிடம் பயின்றார். அந்த படத்தில் வரும் 'உன்னை காணாது' பாடலுக்கு சிறந்த நடன அமைப்பாளருக்கான தேசிய விருதை பிர்ஜு மகாராஜ் பெற்றார்.
அதேபோல் பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்திற்காகவும் தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய நடனக் கலைக்கு உலகளவில் அங்கீகாரம் வழங்கிய பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு கலை உலகிற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க:Covid-19 India: ஓராண்டை நிறைவு செய்த தடுப்பூசி திட்டம் - சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு