தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு இடதுசாரிகள் ஆதரவு - விவசாயிகள் போராட்டம்

டெல்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், டிசம்பர் 8ஆம் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இடதுசாரிக் கட்சிகள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயி
விவசாயி

By

Published : Dec 5, 2020, 3:22 PM IST

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக விவசாயக் குழுக்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, டிசம்பர் 8ஆம் தேதி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதற்கும் இடதுசாரிக் கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு களங்கம் விளைவிக்கும் விதமான பரப்புரைகளை ஆர்எஸ்எஸ் / பாஜக தொடர்ந்து செய்து வருகின்றன.

டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மற்ற அரசியல் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம். புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details