வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும் வரும் 28ஆம் தேதிவரை கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (நவம்பர் 26), நாளையும் (நவம்பர் 27) விடுமுறை அளித்து கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.