திரவ மருத்துவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று மும்பையில் இருந்து புறப்பட்டு, கோலாப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகப்படியான நிரப்புதல் காரணமாக கோவிட் -19 சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட உயிர் காக்கும் வாயுவை ஏற்றி வந்த டேங்கரில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சதாரா மாவட்டத்தின் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6.15 மணியளவில் நடந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து அறிந்த தொழில்நுட்பக்குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து கசிவை சரிசெய்தனர். அதன் பின்னரே டேங்கர் முன்னோக்கி பயணிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் அலுவலர் ஒருவர் கூறினார்.