டெல்லி: முன்னணி பொருளாதார நிபுணர் அபிஜித் சென் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72. இதுகுறித்து அவரது சகோதரர் பிரனாப் சென் கூறுகையில், ‘நேற்றிரவு 11 மணிக்கு அபிஜித்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நள்ளிரவு காலமானார்" என்று தெரிவித்தார்.
முன்னணி பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார் - மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது
இந்தியாவின் முன்னணி பொருளாதார நிபுணரும், திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினருமான அபிஜித் சென் நேற்றிரவு (ஆகஸ்ட் 29) காலமானார்.
முன்னணி பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார்
அபிஜித் சென், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்டக் கமிஷனில் உறுப்பினராக இருந்தார். விவசாயப் பொருளாதார நிபுணராகவும், கல்வியாளராகவும் சிறந்து விளங்கினார். டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.
இதையும் படிங்க:வரும் தீபாவளி முதல் 4 மெட்ரோ நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகம்...