தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொடி நாள்: தலைவர்கள் மரியாதை! - படை வீரர்கள் கொடி நாள்

டெல்லி: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் படை வீரர்கள் கொடி நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினர்.

தலைவர்கள் மரியாதை
தலைவர்கள் மரியாதை

By

Published : Dec 7, 2020, 8:55 PM IST

பாதுகாப்பு படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி படை வீரர்கள் கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொடி நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக படை வீரர் கொடி நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. அவர்களின் சிறந்த சேவையாலும் தன்னலமற்ற தியாகத்தாலும் இந்தியா பெருமை கொள்கிறது. பாதுகாப்பு படையின் நலனுக்காக நீங்கள் உங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டும். வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இது பேருதவியாக அமையும்" என பதிவிட்டுள்ளார்.

படை வீரர்கள் கொடி நாள் நிதிக்கு உதவ மக்கள் முன்வர வேண்டும் என ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் டிசம்பர் மாதம் முழுவதும் கொடி நாள் கொண்டாடப்படும் என அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details