தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கரோனா பாதிப்பு!

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனார்.

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

By

Published : Jan 13, 2022, 3:57 PM IST

டெல்லி : மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வியாழக்கிழமை (ஜன.13) கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக லேசான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இது குறித்து அவரது அலுவலகம் தரப்பில் வெளியான அறிக்கையில், “லேசான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் மல்லிகார்ஜூன கார்கே தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவர் முழுமையான தடுப்பூசி போட்டிருந்தார்” என்று கூறப்பட்டிருந்தது.

ஜன.12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கேவும் தற்போது கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேர் கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி, பாஜக தேசிய செயலர் ஜெ.பி. நட்டா, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் ஆகியோரும் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க :காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லிக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details