திருவனந்தபுரம்:கேரள அரசில் இன்று(டிச.24) காலை ஜனநாயக கேரள காங்கிரஸ் கட்சியின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஆண்டனி ராஜூ மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் துறைமுக அமைச்சராக இருந்த அகமது தேவர் கோவில் ஆகியோர் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம், தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எல்டிஎப் (LDF) அமைப்பாளர் ஜெயராஜன், “2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து புதிய அமைச்சர்கள் வரும் டிச.29ஆம் தேதி பதவி ஏற்பார்கள் எனவும், அவரது இலாக்காக்கள் முதலமைச்சரால் முடிவு செய்யப்படும் எனவும், இது கேரளாவில் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி கட்சியின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், காங்கிரஸ் எஸ் (S) பிரிவைச் சார்ந்த ராமசந்திரன் கண்டனப்பள்ளி மற்றும் கேரள காங்கிரஸ் பி (B) பிரிவைச் சார்ந்த கே.பி.கனேஷ்குமார் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதிவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜூ, “நான் நவம்பரில் ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன். ஆனால், நவ கேரள சதாஸ் காரணமாக முதலமைச்சர் என்னை கூடுதலாக பதவி வகிக்க சொன்னார். அதனால் நான் ராஜினாமா செய்ய தாமதமாகி விட்டது” என்றார்.