தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் - one day court boycott

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : Sep 8, 2021, 7:03 AM IST

தமிழ்நாட்டில் ரவுடிகள், சமூக விரோதிகளால் தொடர்ந்து வழக்கறிஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வழக்கறிஞர் முருகானந்தை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தாக்கினர்.

இதனால் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை என நேற்று ( செப்.7) ஒருநாள் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் நேற்று (செப்.7) ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களை தாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1000 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details