தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜிப்மர் மருத்துவமனையில் புதிய கரோனா தடுப்பூசிக்கான மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு தொடக்கம் - ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் புதிதாக புதிய கரோனா தடுப்பூசிக்கான மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

jipmer
jipmer

By

Published : Oct 8, 2021, 10:25 AM IST

இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தற்போது ஆராய்ச்சியில் உள்ள புதிய கரோனா தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள புதிய தடுப்பூசி மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பயோ டெக்னாலஜி துறையில் ஒரு பிரிவான பயோ டெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் நிதி உதவி அளிக்கிறது.

அதிக செயல் திறன், குறைவான பக்க விளைவுகள், நீண்ட கால பாதுகாப்பு, ஒரே ஒரு நாசித் துவாரத்தில் தெளிப்பு அல்லது சொட்டு மருந்து போன்ற மாற்று வழிகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான தடுப்பூசிகள் போன்ற பல மேம்பட்ட அம்சங்களுக்கு புதிய தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

எதிர்காலத்தில் கரோனா ஏற்படுத்தும் வைரசின் மரபணு மாற்றங்களைக் கொண்ட புதிய வகைகள் வெளிப்படும்போது புதிய தடுப்பூசிகள் தேவைப்படலாம். எனவே உலக அளவில் புதிய கரோனா தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன.

தடுப்பூசிகள் புதிதாக உருவாக்கப்படுவதால் இவை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஜிப்மரில் உள்ள கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிப் பிரிவு அத்தகைய வளர்ச்சியில் பங்கு வகிக்கும். இந்தப் பிரிவு புதிய தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்க ஆர்வம் உள்ள நபர்களின் பட்டியலைத் தயாரிக்க உள்ளது.

எனவே ஒவ்வொருவரும் புதிய கரோனா தடுப்பூசி மீதான சோதனைகளில் சேர முன்வந்து நம் நாட்டிற்கும் குடிமக்களுக்கும் உதவலாம். இதற்கு முன்பு கரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் இந்தப் பரிசோதனைகளில் பங்கேற்கலாம். ஆர்வமுள்ள நபர்கள் https://bit.ly/3ypMREy என்ற இணைப்பினைத் தொடர்புகொள்ளலாம்" என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலவச சிகிச்சை தொடரும் - ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details