தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விடைபெற்றார் பிபின் ராவத்: ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கு

பிபின் ராவத், அவரது மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு அவர்களது மகள்களான கிருத்திகா, தாரிணி இறுதிச்சடங்கு செய்தனர்.

முப்படைத் தளபதி பிபின் ராவத்
முப்படைத் தளபதி பிபின் ராவத்

By

Published : Dec 10, 2021, 9:41 PM IST

டெல்லி:இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத்திற்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டன. 17 குண்டுகள் முழங்க ராணுவ நெறிமுறையின்படி பிபின் ராவத்தின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத்தின் மகள்கள், கிருத்திகா, தாரிணி டெல்லி ராணுவ முகாமில் உள்ள பிரார் சதுக்கத்தில் அமைந்திருக்கும் மயானத்தில் தங்கள் பெற்றோருக்கு இறுதிச் சடங்கு நடத்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்த இறுதிச் சடங்கில் கிருத்திகா, தாரிணியுடன் உற்றார் உறவினர் பலரும் கலந்து கொண்டனர்.

பல முக்கியப் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் தங்கள் மரியாதையைத் தெரிவிக்கும் வகையில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் டெல்லி சர்தார் படேல் மார்க் (Sardar Patel Marg) வழியாகச் சென்றது. நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி, நூற்றுக்கணக்கான பொது மக்களுக்கு மத்தியில் சாலையோரம் நின்று பிபின் ராவத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பல ஆயிரம் மக்கள் தங்கள் கைகளில் மூவர்ணக் கொடி, பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத்தின் படங்களுடன் இறுதி யாத்திரை ஊர்வலத்தில் பங்கு கொண்டனர். ராணுவத்தின் உயர் அலுவலர்கள் பலரும் இந்த இறுதி யாத்திரையில் பங்கு பெற்றனர்.

போக்குவரத்துச் சீராக நடைபெற சாலையின் இரு பக்கங்களிலும் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாத்திய இசை ஒலிக்க முப்படை ராணுவ வீரர்களும் சாலையில் அணிவகுத்துச் சென்று தங்களது மரியாதையை முப்படை தளபதிக்கு செலுத்தினர்.

மூவர்ணம் போர்த்தப்பட்ட பெட்டியில் பிபின் ராவத்தின் உடல்

மூவர்ணம் போர்த்தப்பட்ட பெட்டியில் மலர்களால் அலங்கரித்து பிபின் ராவத்தின் உடலைக் கொண்டு சென்றனர். மக்கள் பலரும் முப்படை தளபதியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர்.

பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற Mi17V5 ஹெலிகாப்டர் புதன்கிழமை (டிச 8) தமிழ்நாட்டில் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தனர்.

பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு இறுதிச் சடங்கு நடத்துவதற்கு முன்பாக அவர்களின் உடலானது, மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அங்குள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டது.

முன்னதாக, 3 மணியளவில் பிபின் ராவத்தின் இல்லத்திற்கு முன்பாக திரண்டிருந்த மக்கள் முப்படைத் தளபதியை போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பினர்.

பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு அவர்களது மகள்களான கிருத்திகா, தாரிணி இறுதிச் சடங்கு செய்தனர்

பின்னர், கிருத்திகா, தாரிணி ஆகியோர் இறுதிச் சடங்கு நடத்தினர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: பிபின் ராவத்திற்கு இறுதி மரியாதை

ABOUT THE AUTHOR

...view details