ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரான கிரிஷன் தேவ் சேத்தி ஜம்முவில் காலமானார். 1925ஆம் ஆண்டு மிர்பூரில் பிறந்த சேத்தி, ஜம்மு காஷ்மீரின் தன்னாட்சிக்கான முக்கிய குரலாக விளங்கினார்.
1949ஆம் ஆண்டு தேசிய மாநாட்டு கட்சி தொடங்கப்பட்ட போது அதன் பொதுச் செயலாளராக இருந்த சேத்தி, நோஷேரா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். சுதந்திரத்துக்கு பின்னர் பிரிவினையின் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் காலத்தில், அதற்கென தனி அரசியல் சாசன நிர்ணய சபை உருவாக்கப்பட்டது.