போபால்:நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் டிசம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் குரூப் கேப்டன் வருண் சிங் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விமான படை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சொந்த ஊரான மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.