ஜம்மு காஷ்மீர்பண்டிட் சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது இறுதி சடங்கு இன்று (மே 13) நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள சடூரா தாலுகா அலுவலகத்தில் நேற்று (மே 12) 2 தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், ராகுல் பட் என்ற ஊழியர் கொல்லப்பட்டார். இந்த ஊழியர் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர். அவரது இறுதிச்சடங்கு இன்று (மே 13) பந்தலாப்பில் நடைபெற்றது. அப்போது ஏடிஜிபி முகேஷ் சிங் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.