கோலாப்பூர் (மகாராஷ்டிரா):மகாராஷ்டிரா மாநிலம், ராதநகரி பகுதியில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் நாட்டின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி வகையான சதர்ன் பேர்ட்விங் (Southern Birdwing) காணப்பட்டது. இதற்கு சஹ்யாத்ரி பேர்ட்விங் (Sahyadri Birdwing) என்று மற்றொரு பெயரும் உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பட்டாம்பூச்சியாக அறியப்படும் சதர்ன் பேர்ட்விங் மற்ற பட்டாம்பூச்சிகளை விட, அதன் அளவில் பல மடங்கு பெரியதாக உள்ளது. இது சுமார் 150 முதல் 200 மிமீ வரை இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல வண்ணங்களில் இந்த பட்டாம்பூச்சியை காணமுடியும் என்றும் கூறுகின்றனர்.
ராதநகரி பூங்காவில் காணப்பட்ட பட்டாம்பூச்சியின் உடல் கோல்டன் நிறத்திலும், இறக்கைகள் நீல நிறத்திலும் உள்ளன. பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பட்டாம்பூச்சியைக் கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் இந்த பூங்காவில் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. 55க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் இந்த பூங்காவில் காணப்படுகின்றன.