பாட்டியாலா(பஞ்சாப்):இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை சித்து வெளியிட்டுள்ளார். அதில், " குறைந்த பட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டங்களில் ஓர் அங்கமாக இருக்கவேண்டும். பருப்பு, எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழங்களை அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும். இதன்மூலம், மாநில அரசின் உதவியுடன் மூன்று கோடி பஞ்சாபியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.
விவசாயிகளுக்கு அளிப்பதற்கு மாநில அரசிடம் வளம் இல்லை என்றால், மணல் மாஃபியா, கேபிள் மாஃபியா போன்ற மாஃபியாக்களை ஒடுக்கினால், மாநில அரசுக்கு வளம் கிடைக்கும். இவையனைத்தையும் ஒன்றிய அரசின் உதவி இல்லாமலே மாநில அரசே செய்யமுடியும். புதிய வேளாண் சட்டங்கள் பஞ்சாப்பின் விவசாயத்தை அழிக்கும் பெரிய சதியின் ஓர் அங்கம். இச்சட்டங்கள், சில முதலாளிகளுக்கு இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை தாரை வார்க்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.